தமிழ் நாட்டில் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொள்ள உள்ள நிலையில்,நேர விரயம், பண விரயம். எல்லோரும் இந்த குப்பையை விட உங்கள் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள் என்று காயத்ரி ரகுராம்(Gayathri Raghuram) கடுமையாக விமர்சித்து உள்ளார்.
தமிழக பா.ஜ.க. துணை தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந் தேதி முதல், ஜனவரி 11-ந் தேதி வரை பாதயாத்திரை செல்கிறார். என் மண்,என் மக்கள் என்று அதற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரத்தில் தொடங்கி, சென்னையில் அந்த பாதயாத் திரை நடைபயணத்தை முடிக்கிறார். டி.ஜி.பி.யை சந்தித்து அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். உரிய பாதுகாப்பு வழங்குவதாக டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.
மேலும், அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்ளும் இடங்கள் பற்றிய விவரமும் டி.ஜி.பி.யிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பாத யாத்திரையை வரும் 28-ந் தேதி ராமேசுவரத்தில் அண்ணாமலையின் பாதயாத்திரை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாதொடங்கி வைக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் 10 மத்திய அமைச்சர்கள் மற்றும் 1லட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பரத் ஜோடோ யாத்திரையை பார்த்து தான் அண்ணாமலை தமிழ் நாட்டில் பாத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார் என காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில் அண்ணாமலையின் பாத யாத்திரை குறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில்,
நேர விரயம், பண விரயம். எல்லோரும் இந்த குப்பையை விட உங்கள் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துங்கள். இது வாக்குகளாக மாறப் போவதில்லை.தனிப்பட்ட செலவுகள் (ஜிஎஸ்டி, வரி) அதிகமாகிவிட்டன. சாதாரண ஏழை வாழ்க்கை வாழ்வது மனிதனுக்கு மிகவும் கடினமாகிவிட்டது.
காய்கறிகளின் விலை மற்றும் இதர விலை உயர்ந்துள்ளது. இத்தனை விஷயங்கள் இருந்தும் ஒருவர் மற்றவர்களின் பணத்தில் விளம்பரம் செய்வது முழு வீண் என காயத்ரி தெரிவித்துள்ளார்.