ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வரும் பாஜக பெண் நிர்வாகி அஞ்சலை கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் ஏற்கனவே 11 பேர் கைதாகி உள்ள நிலையில் நேற்று முன்தினம் பெண் வக்கீல் மலர்கொடி உட்பட மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஹரிகரன், சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் , பின்னர் பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடைத்தனர்.
Also Read : அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்கீடு – முதல்வர் ஸ்டாலின்
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வரும் பாஜக பெண் நிர்வாகி அஞ்சலையை கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் உடனடியாக நீக்குவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது .
இது குறித்து பாஜக தலைமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
வட சென்னை மேற்கு மாவட்டத்தின் மாவட்ட துணைத் தலைவராக பணியாற்றி வந்த அஞ்சலை கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அறுவுறுத்தப்படுகிறது என பாஜக தலைமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது