தமிழ் மாநில காங்கிரஸ், காமராஜர் மக்கள் கட்சி, பாஜக உடனான கூட்டணியில் பாமகவும், தேமுதிகவும் இடம்பெற வேண்டும். – தமிழருவி மணியன் பேட்டி.
தமிழகத்தில் உள்ள மக்களுக்கு தண்ணீர் பிரச்சனை என்பது கண்ணீர் பிரச்சனையாக மாறி இருக்கிறது. பயிர் பிரச்சனை உயிர் பிரச்சனையாக மாறி இருக்கிறது. நாளை மறுதினம் நடக்கும் கூட்டத்தில் ஆட்சியாளர்களிடம் இந்த கோரிக்கையை வைத்துவிட்டு திரும்ப வேண்டும். – ஜீ.கே.வாசன் பேட்டி
காமராஜர் மக்கள் கட்சி சார்பாக காமராஜர் பொற்கால ஆட்சி சாதனைகள் மலர் வெளியீட்டு விழா மதுரை தனக்கன்குளம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து காமராஜ் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்:
தமிழருவி மணியன் கூறுகையில்:
தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக, காமராஜர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் கூட்டணி இங்கிருந்து புறப்படும். பாட்டாளி மக்கள் கட்சியும், இந்த கூட்டணியில் இடம் பெற வேண்டும், தேமுதிக இந்த கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திமுகவின் ஊழல் ஆட்சிக்கு எதிராக அண்ணாமலை களம் கண்டு வருகிறார். மாற்று அரசியல் வரவேண்டும் அகில இந்திய அளவில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாநூறு இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெற வேண்டும்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசின் தொடர்ச்சி என்பது இந்தியாவிற்கு அவசியம். கொரோனாவிற்கு பிறகு இந்தியாவின் பொருளாதர வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பு. வெளிநாடுகளுக்கு இடையே கிடைத்துள்ள மரியாதை மதிப்பு இதை கருத்தில் கொண்டு இளைஞர்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும்.
ஜி.கே.வாசன் கூறுகையில்:
காவிரியில் காங்கிரஸ் தலைமையிலான கர்நாடகா அரசு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று டெல்டா விவசாயிகளை மீண்டும் வஞ்சிக்க தொடங்கி இருக்கிறது. நாளை மறுதினம் முதல்வர் பெங்களூர் செல்ல இருக்கிறார். தமிழகத்தில் உள்ள மக்களுக்கு தண்ணீர் பிரச்சனை என்பது கண்ணீர் பிரச்சனையாக மாறி இருக்கிறது. பயிர் பிரச்சனை உயிர் பிரச்சனையாக மாறி இருக்கிறது. நாளை மறுதினம் நடக்கும் கூட்டத்தில் ஆட்சியாளர்களிடம் இந்த கோரிக்கையை வைத்துவிட்டு திரும்ப வேண்டும் அதுதான் நமது விவசாயிகள் உங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலை ஏற்படும்.
அண்ணாமலை கூறுகையில்:
காமராஜர் தமிழக அரசியலில் மனசாட்சியாக இருப்பவர். எதிர்க்கட்சிகளின் முரண் இல்லாத கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. தனி மனிதராக ஒரு கூட்டணி சேரும் போது அது மூன்று மாதங்களுக்கு மேல் நிற்காது. உங்களின் நோக்கம் ஜூலை 18ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்திய கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் இருக்கப் போகிறார்கள். வருகிற 23ஆம் தேதி தமிழகம் முழுவதும் பஞ்சாயத்து ராஜில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பதினெட்டாம் தேதி முதல்வர் கண்டனக் குரலை பதிவு செய்யாமல் வந்தால் நாங்கள் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை காட்டுவோம்.