நடுக்கடலில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் கடலில் தத்தளித்த 4, மீனவர்கள் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் 25, லட்ச ரூபாய் மதிப்புள்ள படகு, இஞ்சின், வலைகள் மூழ்கியதால், மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை துறைமுகத்திலிருந்து கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்தஞானப்பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அவர் உள்ளிட்ட 4 மீனவர்கள் நேற்று இரவு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் 13 நாட்டுக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் எழுந்த ராட்சச அலை படகைப் பதம் பார்த்துள்ளது. இதில் படகு அடியின் உள்ளே ஓட்டை விழுந்ததால், கடல் நீர் படகில் உள்ளே குபு குபுவென புகுந்துள்ளது.
இதில் படகு முழுவதும் கடல் நீர் புகுந்ததால், விசைப்படகு திடீரென நடுக்கடலில் மூழ்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் நான்கு பேரும் கடலில் குதித்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் கரை நீந்த தொடங்கினர்.
அப்போது அவ்வழியே மற்றொரு படகில் வந்த மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் ராஜ்குமார் செண்பகம் மனோ ஆகிய நான்கு பேரை மீட்டுக் கரை சேர்த்தனர்.
இந்த விபத்தில், 25, லட்ச ரூபாய் மதிப்புள்ள விசைப்படகு மற்றும் இஞ்சின், வலைகள் நடுக்கடலில் மூழ்கியதால், மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து விபத்தில் ஏற்பட்ட சேதத்தைச் சரி செய்ய அரசு நிவாரணம் வழங்க என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25, லட்ச ரூபாய் மதிப்புள்ள படகு, இஞ்சின், வலைகள் மூழ்கியதால், நாகை மீனவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.