#Breaking | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.
ஏற்கனவே 111 பேர் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில், கூடுதலாக 6 பேர் நியமனம் செய்யபட்டுள்ளது. மேலும் கோபால், எஸ்.வளர்மதி, ரத்தினவேல், ஆசைமணி, சிவா.ராஜமாணிக்கம், பாஸ்கரன் ஆகியோர் நியமனம் செய்யபட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். ஈபிஎஸ் தரப்பினர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தஓ.பன்னீர்செல்வம், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக நாங்கள் வேட்பாளரை நிறுத்த உள்ளோம். வருகின்ற 2026ஆம் ஆண்டு வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனை தொடர்ந்து தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அணி சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு பாஜக முழு ஆதரவு அளித்து வருகிறது.
மேலும் எடப்பாடி தலைமையில் ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை நடைபெற்றது .அந்த ஆலோசனை கூட்டத்தில் இடைத்தேர்தலில் பெண் வேட்பாளரை நிறுத்தலாமா அல்லது முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை நிறுத்தலாமா? என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளபட்டது.
இந்த நிலையில் நேற்று இடைத்தேர்தல் தொடர்பாக 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைத்துள்ள அதிமுக 111 பேர் அமைத்து அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுமார் 7 மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுகவின் தேர்தல் பணி குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்
அதில் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது அதிமுக வேட்பாளர் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தேர்தல் வியூகம் குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.