#BREAKING NEWS:கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி;
கலவரம் காரணமாக மூடப்பட்ட தனியார் பள்ளியை திறக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்று கடந்த ஆண்டு 2022 நவம்பர் மாதம் 15 தேதி பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிர் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியதுடன் பள்ளிப் பொருட்களை சேதப்படுத்தினர்.
இதனால் பள்ளி மூடப்பட்டு மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டது. இது குறித்து மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிர் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் பள்ளி தாக்கப்பட்ட நிலையில் சீரமைக்கப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் பள்ளியை திறக்க அனுமதிக்க கோரி கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பில் இருந்து ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆய்வுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ,
9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என பள்ளி நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரு மாதத்திற்கு பின்னர் மற்ற வகுப்புகளையும் தொடங்குவது குறித்து முடிவெடுக்கலாம் என தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி பள்ளிக்கு மீண்டும் திரும்பும் மாணவர்களின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என அறிக்கை தாக்கல் செய்ய என கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலைவயில் கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி வழங்கபட்டுள்ளது .மேலும் கலவரம் காரணமாக மூடப்பட்ட தனியார் பள்ளியை திறக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிரபித்து உள்ளது,இதனை தொடர்ந்து LKG முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்க 6 மாதங்களுக்கு பிறகு முடிவெடுக்கபடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது