#BREAKING | சேது சமுத்திர திட்டம் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் தெரிவித்துள்ளார்.
அண்ணாவின் கனவு திட்டம் சேது சமுத்திரத் திட்டம், இந்த திட்டத்திற்கான தீர்மானத்தை முன்மொழிகிறேன்”என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை இன்று தொடங்கியது,அதில் 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதல் திருத்தச் சட்ட முன்வடிவை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் பேரவையில் அறிமுகம் செய்தார்.
1967ம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்த பேரறிஞர் அண்ணா, கலைஞருக்கு எழுதிய மடலில் இத்திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.
ஆனால் 2004ம் ஆண்டு ஒன்றிய அளவில் காங்கிரஸ் ஆட்சி மாறி திமுக கூட்டணி ஆட்சி வந்த பிறகு ₹247 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் 50% முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பாஜக இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது.
மேலும் இத்திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, திடீரென நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு திட்டத்திற்கு எதிராக வழக்கு போட்டார்.
இதனை தொடர்ந்து சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் வர்த்தகம் பெருகும், இலங்கையை சுற்றிக்கொண்டு கப்பல் போக வேண்டிய நீளம் குறையும், மீனவர்கள் வாழ்வு செழிக்கும் திட்டம் ஆகும்.
மேலும் அண்ணாவின் கனவு திட்டம் சேது சமுத்திரத் திட்டம், இந்த திட்டத்திற்கான தனி தீர்மானத்தை முன்மொழிகிறேன்”என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட பேரவையில் தெரிவித்துள்ளார்.