சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் மீட்சி காணப்பட்டதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றத்துடன் காணபட்டு வருகிறது.அந்த வகையில் மே மாத தொடக்கத்தில் தங்கம் விலையில் ஏற்ற இரக்கம் காணப்பட்டது.
மேலும் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு தங்கம் விலையில் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.இந்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.5,680ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,147ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 49,176ஆக விற்பனையாகிறது.
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.