ஒலிம்பிக்கில் 2 முறை பி இந்தியா சார்பாக பதக்கம் வென்ற பி.வி .சிந்து கோலாலாம்பூரில் நடைபெற்ற போட்டியின் கால் இறுதி சுற்றில் சிந்து, சீன தைபே வீராங்கனை தாய் சூ இங்-கை எதிர்கொண்டார்.இந்த ஆட்டத்தில் பிவி.சிந்து, மற்றும் சாய்னா நெவால் ஆகியோர் மலேசிய ஓபன் பாட்மிண்டன் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினர்.
ரியோ ஒலிம்பிக் வெள்ளி வீராங்கனையான பி.வி.சிந்து, தரவரிசையில்லாத சீன வீராங்கனை சென் யுஃபெய் என்பவரிடம் 18-21, 21-19, 21-17 என்ற செட்களில் போராடி தோல்வியடைந்தார். கடந்த ஞாயிறன்று இந்தியா ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சிந்து தரவரிசையில் இல்லாத வீராங்கனையிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதுவும் ஒரு மணி நேரம் 8 நிமிடங்களில் சிந்து தோல்வி அடைந்தார்.மற்றொரு நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சி என்பவரிடம் 19-21, 21-13 21-15 என்ற செட்கணக்கில் தோல்வி தழுவி வெளியேறினார் .யாமகுச்சி தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.முதல் கேமை கைப்பற்றிய சிந்து, அடுத்த இரு கேம்களிலும் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது