எடப்பாடி பழச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு வழக்கில், சிபிஐ விசாரணை ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2011 முதல் 2016 வரையில் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நெடுஞ்சாலைத்துறை திட்டங்களை தனது நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, கடந்த 2018-ம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்குமாறு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள் இபிஎஸ்-க்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரிக்க ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது