சென்னை துறைமுகத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் கடலில் பாய்ந்த நிலையில் கார் ஓட்டுநரை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை துறைமுகத்தில் பணியாற்றி வரும் கடலோர காவல்படை அதிகாரியை அழைத்துச்செல்ல நேற்று இரவு தனியார் கார் ஓட்டுநர் வந்துள்ளார் . அப்போது கார் துறைமுகப்பாதையில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் கடலில் விழுந்துள்ளது .
Also Read : ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறியது ‘லாபட்டா லேடீஸ்’ திரைப்படம்..!!
இதில் கடலில் நீந்தி உயிர் தப்பிய கடலோர காவல்படை அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கார் ஓட்டுநரான முகமது ஷாகியை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் மாயமான கார் ஓட்டுநர் முகமது ஷாகியை விரைவாக மீட்டுத் தரக்கோரி அவரது உறவினர்கள் கொட்டும் மழையில் தரையில் அமர்ந்து கண்ணீருடன் கோரிக்கை வைத்து வருகின்றனர்.