அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற கேரம் வீராங்கனை காசிமாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற உலக கேரம் போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனை காசிமா பங்கேற்று 3 தங்கம் வென்று சாதனை படைத்தார்.
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான காசிமா தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி என 3 பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து அசத்தினார்.
Also Read : தாலிபான் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்க ரஷ்யா முடிவு..!!
இந்நிலையில் காசிமாவுக்கு ரூ.1 கோடிக்காக காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்; அரசு பரிசுத் தொகை அறிவிக்கவில்லை என காசிமாவின் தந்தை வேதனை தெரிவித்த நிலையில், இன்று துணை முதல்வரின் கையால் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
காசிமாவுடன் சேர்ந்து இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்கம் வென்ற மித்ராவுக்கு ₹50 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.