மதுரை விமான நிலையத்தில் நேற்று அமமுக கட்சி நிர்வாகியைத் தாக்கியது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ( Edappadi Palanisamy) சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தபோது துரோகியுடன் பயணம் செய்கிறோம் என நபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து fackebookல் பதிவிட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
முன்னாள் முதல்வரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து, விமானம் மூலம் காலை 11 மணியளவில் மதுரை வந்தடைந்தார்.
அப்போது சிங்கபூரிலிருந்து சென்னை வழியாக மதுரை வந்த வையாபுரிபட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரன் (வயது 42) என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy )வந்த விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
பின்னர் ,விமானத்தில் வந்தவர்கள் பேருந்தில் வந்தபோது செல்போனில் வீடியோ எடுத்து, துரோகியுடன் பயணம் செய்கிறோம். சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர். 10.5 இடஒதுக்கிடு வழங்கி தென்மாவட்ட மக்களுக்கு துரோகம் எனக் கூறி பேஸ்புக் வில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாவலர், மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர்கள் ராஜேஸ்வரனின் செல்போனை பறித்து, விசாரணைக்காக போலீஸாரிடம் ஒப்பத்தனர்.இதனால்,மதுரை விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.