சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான, முதல் பருவத் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ள நிலையில் பொதுத் தேர்வை 2 கட்டங்களாக நடத்த அந்நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடைபெற்றன. தற்போது கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை ஒரே கட்டமாக நடத்தினால், மாணவ- மாணவியர் தேர்வு எழுத சிரமப்பட நேரிடும் என்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2 கட்டங்களாக தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ நிவாகம் முடிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு நாடு முழுவதும், 36 லட்சம் மாணவ- மாணவியர் சிபிஎஸ்இ தேர்வை எழுதுகின்றனர். இது, கடந்த ஆண்டைவிட 4 லட்சம் பேர் கூடுதலாக பதிவு செய்துள்ளதாக என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.