நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்குப் பெற்றோர் தரும் அழுத்தமும் மத்திய அரசும் தான் காரணம் என்று பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்குப் பெற்றோர் தரும் அழுத்தமும் ஒரு காரணமாக இருப்பதாகவும் , தமிழக மாணவர்களின் தற்கொலைகளுக்குக் காரணம் மத்திய அரசுதான் என்றும் மயிலாடுதுறையில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள இந்த உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் பாமக நிர்வாகி கணேசன் என்பவரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மணமக்கள் அருண் பிரசாத் மற்றும் திவ்யா ஆகியோருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எழுதப்படாத மோசடி நடைபெறுவதாகவும் ஒரு மூட்டைக்கு ஐம்பது ரூபாய் வரை விவசாயிகளிடம் வசூல் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் ,டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஆயிரம் கோடி வரை கரும்பு நிலுவைத் தொகை விவசாயிகளுக்கு உள்ளதாகவும்,அதனை அரசு பெற்றுத் தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இன்று காலை சென்னை மதுரையில் பகுதியில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்குப் பெற்றோர்களும் ஒரு காரணம் என்றும் , பெற்றோர்களுடைய அழுத்தம் தாளாமல் மாணவர்கள் இது போன்ற முடிவுகள் எடுப்பதாகவும் , மாணவர்கள் தற்கொலை முடிவுகளைத் தயவு செய்து எடுக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற தற்கொலைகள் நடப்பதில்லை என்றும் இதற்கு ஆளுநர் என்ன பதில் சொல்லப் போகிறார் எனவும் கேள்வி எழுப்பினார் . தற்கொலைகளுக்குக் காரணம் நீட் தேர்வு தான் என்றும் அதை ரத்து செய்யாத மத்திய அரசுதான் தமிழ்நாடு மாணவர்களின் தற்கொலைக்குக் காரணம் என்றும் தான் நினைப்பதாகக் கூறினார்.
டெல்டா பகுதிகளில் அதிகமான கொலைக் குற்றங்கள் நடைபெறுவதாகவும் முதலமைச்சரின்கீழ் காவல்துறை இயங்குவதால் இதற்குச் சிறப்புக் கவனம் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். டெல்டா பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளை அழைத்துக் கலந்து ஆலோசித்து உரியத் தீர்வு காண வேண்டும் எனவும் கூறினார்.