கடந்த மே மாதம் 5ஆம் தேதி 2023-ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் சித்ரா பௌர்ணமி தினமான வெள்ளிக்கிழமை நிகழந்தது. இது பகுதி சந்திர கிரகணமாக வந்தது.
பொதுவாக, ஒரு ஆண்டில் மொத்தம் 4 கிரகணம் நடைபெறும். சந்திர கிரகணம் பவுர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நடைபெறும். அதன்படி, இரண்டு சந்திர கிரகணம், இரண்டு சூரிய கிரகணம் நிகழும். ஆனால், சோபகிருது ஆண்டில் 3 சூரிய கிரகணமும் 3 சந்திர கிரகணமும் நிகழந்துள்ளது.

இன்று மற்றும் நாளை (28.10.23 – 29.10.23) கடைசி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்தியாவில் சந்திர கிரகணத்தை தெளிவாக பார்க்கலாம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுக்கிடையில் வரும் நள்ளிரவில் இந்த கிரகணம் இந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் தெளிவாகத் தெரியும், என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று இரவு நிகழ உள்ள சந்திர கிரகணத்தால் கோவில்களில் பூஜை நேரங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, பழனி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சமயபுரத்தில் தரிசன நேரத்தில் மாற்றம்.
மேலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது. சந்திர கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் முடிந்த பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.