சென்னையில் கடன் கொடுத்து காதலை வளர்த்து வந்த காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்த காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் தனக்காக ரூபாய் 2 லட்சம் கடன் பெற்றுக்கொடுத்த காதலியை ஏமாற்றிவிட்டு அஜித்குமார் என்ற இளைஞர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
Also Read : “விருப்பம் இல்லாதவங்க கட்சியில் இருந்து விலகலாம்” – அன்புமணி – ராமதாஸ் இடையே போதல்..!!
அஜித்குமாரால் ஏமாற்றப்பட்ட திருவள்ளூரைச் சேர்ந்த அந்த பெண் அளித்த புகாரின் பேரில் அஜித்குமாரை கைது செய்த போலீசார் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடன் கொடுத்து காதலை வளர்த்து வந்த காதலியை நைசாக கழட்டிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த காதலனுக்கு பாடம் புகட்டிய காதலியின் செயல் தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.