ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தங்கம் விலை (gold price) ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு 45 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 44 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விற்பனையாகிறது.
இந்நிலையில், ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.
அதன்படி நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,495 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் ரூ. 43,960 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,456ஆகவும், சவரனுக்கு ரூ.312 குறைந்து ஒரு சவரன் ரூ.43,648 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று,18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 4,508ஆகவும், ஒரு சவரன் ரூ.36,008 ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 குறைந்து கிராம் 4,469 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.256 குறைந்து ஒரு சவரன் ரூ. 35,752 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று, வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200ஆகவும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,700ஆகவும் விற்பனையாகிறது.