Chengalpattu road accident : புதுச்சேரிக்கு காரில் சென்ற 5 பேர் சென்னை திரும்பிக் கொண்டிருந்த போது, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில், மாடு குறுக்கே வந்ததால் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி கார் விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க : Online Rummy : உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்துக..- ராமதாஸ்!
இந்த விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் Chengalpattu road accident.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்து தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
“செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், வாயலூர் கிராமம், கிழக்குக் கடற்கரை சாலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணிக்கு பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மரத்தின் மீது மோதிய விபத்தில்,
அதில் பயணம் செய்த சென்னைச் சேர்ந்த ராஜேஷ், மாதேஷ், யுவராஜ், ஏழுமலை ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், விக்னேஸ்வரன் என்பவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : POCSO Cases : குற்றவாளிகள் அதிக அளவில் விடுதலை.. காரணம் என்ன? – அன்புமணி ஆவேசம்!