வங்கி கடன் தருவதாக கூறி ஒரு கோழிப்பண்ணையில் உள்ள மொத்த கோழிகளையும் சாப்பிட்ட வங்கி மேலாளரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூப்சந்த் என்ற விவசாயியின் தொழிலை பெருக்க வங்கி கடன் தருவதாக கூறி, அதற்கு லஞ்சமாக 900 கோழிகளை வாங்கி சமைத்து சாப்பிட்ட SBI வங்கி மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரூப்சந்த்திடம் 10% கமிஷன் பெற்றதுடன், சனிக்கிழமைதோறும் ஒரு நாட்டுக்கோழியை தரவேண்டும் என SBI வங்கி மேலாளர் கூறியுள்ளார்.
Also Read : நடிகர் சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா..?
நாட்கள் நகர பண்ணையில் இருந்த மொத்த கோழிகளையும் வங்கி மேலாளர் தின்று தீர்த்துள்ளார். கோழிப்பண்ணையில் உள்ள மொத்த கோழிகளையும் இழந்தும் தான் கேட்ட கடன் தொகை கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரூப்சந்த் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து SBI வங்கி மேலாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.