இன்று பிறந்தநாள் கொண்டாடும் திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் இன்று தனது 61 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்..
“இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திருமாவளவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில்,
“சாதிய – மதவாத – சனாதன சக்திகளுக்கு எதிராக மக்கள் மன்றத்திலும் – நாடாளுமன்றத்திலும் சமரசமற்ற போர்க்குரலை எழுப்பி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி இந்தியாவை காப்பதற்கான போரில் அண்ணனின் பங்களிப்பும் – செயல்பாடுகளும் வெல்லட்டும்” என்று தெரிவித்துள்ளார்.