Durai Vaiko : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கால் தடுமாறி விழுந்ததில் இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் நேற்று வைகோவின் உடல்நிலை குறித்து சில விஷமிகள் தவறான செய்திகளை பரப்பி ஆதாயம் தேட அற்பத்தனமாக முயற்சிக்கிறார்கள் என்றும், வைகோ பற்றி வெளிவரும் எந்த செய்தியையும் புறந்தள்ளுங்கள் என்றும் துரை வைகோ கூறியிருந்தார்.
இதனிடையே இன்று, தலைவர் வைகோ அவர்களுக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. தலைவர் நலமுடன் இருக்கிறார் என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளபதிவில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது..
“இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களுக்கு சற்றுமுன் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. தலைவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
இதையும் படிங்க : இந்தியாவின் விளையாட்டு தலைநகரம் தமிழ்நாடு – தமிழக அரசு பெருமிதம்!
தலைவரின் இடது தோளில் மூன்று இடத்தில் எலும்புகள் உடைந்திருந்தது. தற்போது அதை சரி செய்ய டைட்டானியம் பிளேட் வைத்திருக்கிறார்கள்.
நாற்பது நாட்கள் ஓய்வுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தோள்பட்டை சரியாகி இயல்பு நிலைக்கு வந்துவிடும்.
தலைவர் அவர்களுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்திருப்பதால் தொற்றுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஒரு வாரத்திற்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, கழகத் தோழர்களும் நலம் விரும்பிகளும் தலைவரை சந்திக்க வருவதை தவிர்த்து ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார் Durai Vaiko.