நடிகையும் பா.ஜ.க.நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமானரான குஷ்பூ(actress kushboo)மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் குஷ்பு, ரஜினி,கமல், சரத்யாராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
தற்போது நடிகை குஷ்பு அரசியலில் தொடர்ந்து கவனத்தை செலுத்தி வருகிறார்.சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி நடிகை குஷ்பூவிற்கு வழங்கப்பட்டது.
பதவியில் இருந்தாலும் கட்சிப்பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் நடிகை குஷ்பு, திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் நடிகை குஷ்புவுக்கு இடுப்பு எலும்பு பகுதியில் உள்ள வால் எலும்பில் (Tail bone) ஏற்பட்ட கடும் வலி காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.