Actor Thalapathy Vijay | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்.இவரை ரசிகர்கள் அனைவரும் தளபதி செல்லப்பெயரை கொண்டு அழைப்பர்.
இந்த சூழலில் அண்மையில் நடிகர் விஜய் அரசியலில் எண்ட்ரி கொடுத்துள்ளார். அவரது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்தோடும், மேலும் ஒரு படம் மட்டுமே நடிக்கவுள்ளார். அதன் பிறகு அவர் சினிமாவில் இனி நடிக்கமாட்டார் என அறிவித்துள்ளார்.
இப்படி எக்கச்சக்க ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர் விஜய், தவறவிட்ட சில ஹிட்டான படங்களின் லிஸ்டைஇந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தூள்: 2003 ஆண்டு தரணி தூள் படத்தின் கதையை விஜய்க்கு சொல்ல இந்த படத்தில் பெரிய ஸ்கோப் இல்லை என்று மறுத்துவிட்டாராம்.
விக்ரம் நடித்து ஹிட்டான நிலையில் தரணியிடம், நீங்க என்கிட்ட கதை சொன்னது வேற, ஆனால் எடுத்தது வேற மாதிரி இருக்கு என்று கோபித்து கொண்டதால்,
அதன் பிறகு விஜய் கில்லிக்கு ஒப்பந்தமானாராம். 2004 ல் வெளிவந்த கில்லி தளபதிக்கு ஹிட் கொடுத்தது.

முதல்வன்: பிரம்மாண்ட இயக்குனர் சங்கர், அர்ஜுன் மற்றும் ரகுவரன் கூட்டணியில் 1999 வெளிவந்த முதல்வன் திரைப்படத்தில்,
சங்கர் நடிகர் விஜய்யை அணுகியபோது, அதிகமாக அரசியல் உள்ளது என்றும் இதனால் பின்விளைவுகள் ஏற்படும் என்று பயந்து வேண்டாம் என்று கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

சண்டக்கோழி: லிங்குசாமி இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த படம் சண்டக்கோழி.
முதல் பாதியை மட்டும் கேட்டுவிட்டு கதையை ரிஜெக்ட் செய்த நடிகர் விஜய், படம் ரிலீசானதற்கு பிறகு லிங்குசாமியை அழைத்து பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1762381596806754324?s=20

சிங்கம்: ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் மற்றும் வேல் இரண்டு திரைப்படங்களையும் நடிகர் விஜய் மிஸ் செய்துள்ளார்.
பல்வேறு காரணங்களால் விஜய் மறுத்து விட அது சூர்யாவுக்கு போய் மூன்று பாகங்களாக வெளிவந்து செம ஹிட் அடித்தது.

தீனா: அஜித்திற்கு தல என அந்தஸ்தை வாங்கி கொடுத்து ரசிகர் வட்டத்தை மேம்படுத்தியது தீனா திரைப்படம் தான். ஏ.ஆர்.முருகதாஸ் அறிமுக இயக்குனராக முதலில் விஜய்யிடம் கதை சொல்ல,
விஜய் மறுத்த பின்பே அதை அஜித்திற்கு கூறினாராம். அந்த ஆண்டு வெளிவந்த தீனா மற்றும் பிரண்ட்ஸ் இரு திரைப்படங்களிலும் தீனாவே அதிக வசூல் பெற்று சாதனை ( Actor Thalapathy Vijay) படைத்தது.
