‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை வேதூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்கள்.
திராவிடத்தின் முப்பெரும் தலைவர்களான பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கொள்கை வழித்தோன்றலான, நமது தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் “எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும் ” என்ற திராவிட கோட்பாட்டின் படி “மக்களுடன் ஸ்டாலின்” என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17-ஆம் தேதி வேதூர் மாவட்டத்தில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியான பள்ளிகொண்டா பகுதியில் காடனேரி பைபாஸ் சாலை அருகில் முப்பெரும் விழா மிக பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. அந்த விழாவில் “மக்களுடன் ஸ்டாலின்” என்ற செயலியை முதலமைச்சர் வெளியிடுகின்றார்.
அனைவருக்கும் அனைத்தையும் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற பேரறிஞர் அண்ணாவின் குறிக்கோளின்படியும், மக்களுக்காகக் கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தையும் பொது மக்கள் இந்த செயலியின் மூலம் ஒரே சொடுக்கில் தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.’
மக்களுடன் ஸ்டாலின் செயலியின் சிறப்பம்சம்:
செயலியின் ஒரு பிரிவில் “உங்கள் திட்டங்கள்” என்று ஒரு பொத்தான் இருக்கும். பொது மக்கள் பதிவு செய்யும் சுயவிவரத்தைப் பொருத்து, எது பொருந்துமோ அந்த திட்டங்கள் சார்ந்த தகவல் தன்னிச்சையாக இச்செயலியில் வரும். குழந்தைகள், முதியோர், பெண்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் என்று யாருக்கு எந்தத் திட்டம் தேவை என்பதை எளிதாக அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க மக்களுக்கு என்ன செய்தது?, தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது?”. என்று ஒவ்வொரு தொகுதியை பற்றியும் முழுதாக தெரிந்து
கொள்ளலாம். மேலும் 24 தொகுதிகளைப் பற்றிய அரசின் திட்டங்கள் சார்ந்த முழு தகவல்கள் இருக்கும்.
இச்செயலியில் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் பற்றியும், நமது முதலமைச்சரின் களச் செயல்பாடுகள் பற்றியும் பொதுமக்கள்
தெரிந்துகொள்ளலாம். தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற
உறுப்பினர் முதல் கழக உறுப்பினர்கள் வரை அனைவரிடமும்
பொதுமக்களே கேள்விகளைக் கேட்கலாம்.
அதுமட்டுமின்றி நம் முதலமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் என யாரிடம் வேண்டுமென்றாதும் இந்த செயலின் வாயிலாகப் பொதுமக்கள் அழைத்துப் பேசலாம்.
அனைவருக்கும் ஏற்றத் திட்டங்களை அமல்படுத்துவதில் மட்டுமின்றி, அதைக் கடைக்கோடி மக்களுக்கும், எளிமையான வழியில் கொண்டு சேர்ப்பதே அரசின் கடமையாகும். அத்தகைய தொலைநோக்கு
பார்வையோடும், அடிப்படைத் தேவை என்னவென்ற புரிதலோடும் வடிவமைக்கப்பட்டதே “மக்களுடன் ஸ்டாலின்” என்ற செயலி. உடனே இச்செயலியைப் பதிவிறக்கம் செய்து வளமான தமிழ்நாட்டை உருவாக்க ஒன்றாகச் செயல்படுவோம்.
இந்த செய்திக்குறிப்பை உங்களது மேலான அச்சு ஊடகங்கள் மற்றும் காட்சி ஊடகங்களில் வெளியிட்டு அனைவரும் பயன்பெற உதவுமாறு வேண்டுகிறோம்.