சில மனித மிருகங்களின் வக்கிரமும்,வன்மமும் ஒரு உயிரை பறித்துள்ளதாக கோவை ஆசிரியர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவையில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து, தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின்,
கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! என பதிவிட்டுள்ளார்.
கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!
— M.K.Stalin (@mkstalin) November 13, 2021