பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு நபரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்று வாக்குறுதியளித்ததாகக் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து பா.ஜ.க மகளிரணியின் தலைவர் வானதி சீனிவாசன் கூறுகையில், 2014 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, `வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுக்கும் அளவுக்கு இருக்கும்’ என்று தான் பிரதமர் மோடி கூறியுள்ளார் எனவும்,
ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியர் கணக்கிலும் 15 லட்சம் தருவதாக மோடி பேசியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். அதற்கான ஆதாரத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்றும் இல்லையெனில், மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதையடுத்து, தற்போது பாஜக ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என மோடி கூறியதை ஆதாரத்துடன் கொடுக்கத் தயார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை பாடியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், 2013 நவம்பர் 7ஆம் தேதி சத்தீஸ்கரில் நடந்த கூட்டத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று மோடி கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.