தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை இயக்கும் வகையில் அரசு முறை பயணமாகச் சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஒன்பது நாட்களில் அரசு முறை பயணமாகச் சென்றுள்ளார்.
சிங்கப்பூரில் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களைச் சந்திக்கும் முதலமைச்சர் அங்கு நடைபெற உள்ள முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்வதோடு அங்கு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஜப்பான் செல்லும் முதலமைச்சர் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ள இருக்கிறார்.முன்னதாக சிங்கப்பூர் செல்ல விமான நிலையம் வந்த முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்து தெரிவித்த வழியனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட ஆவடி நாசரும் முதலமைச்சர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் முக .ஸ்டாலின் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதன் முக்கிய நோக்கமே உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கத் தான் எனவும்,
இந்த பயணத்தால் பல நூற்றுக்கணக்கான பல தொழில் நிறுவனங்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்யப் புரிந்துணர்வு ஒப்பந்த மேற்கொள்ளதற்கு தான் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றடைந்தார். அவரோடு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, தலைமை செயல் அதிகாரி இறையன்பு உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர்.