திருவண்ணாமலையில் ஹீலியம் பலூன் உதவியுடன் சிறிய ரக செயற்கைக்கோளை CIT கல்லூரி மாணவர்கள் வெற்றிகரமாக வானில் பறக்கவிட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (CIT) கல்லூரியின் ULOG 3 மாணவர் குழுவினர், 25,000 செலவில் தயாரிக்கப்பட்ட 500 கிராம் எடை கொண்ட சிறிய ரக செயற்கைக்கோளை ஹீலியம் பலூன் உதவியுடன் வானில் பறக்கவிட்டனர்.
Also Read : தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பெண் தற்கொலை..!!
குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் முயற்சியாக இதை செய்ததாக கல்லூரி மாணவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சிறிய ரக செயற்கைக்கோளை வடிவமைக்க கல்லூரி நிர்வாகம் பெரிதளவில் ஊக்கமளித்ததாகவும் கடின முயற்சியின் பலனாக இதனை வெற்றிகரமாக வானில் பறக்கவிட செய்துள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.