பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகர் வடிவேலு படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் போட்டிருந்த தடை நீக்கப்பட்டதால் நீண்ட இடைவேளைக்கு லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக லண்டனில் இருந்த வடிவேலு, நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில் விமான நிலையத்தில் வடிவேலுவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சைக்காக அவர் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா மரபணு மாற்றம் அடைந்திருப்பது உறுதியானதால் ஒமைக்ரான் தொற்றாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.