காமன்வெல்த் போட்டிகள் டேபிள் டென்னில் விளையாட்டின் இந்தியா – நைஜீரியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தின் இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றது
22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள காமன்வெல்த் போட்டிகள் வரும் 8-ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
72 நாடுகளில் இருந்து 5,000 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.
காமன்வெல்த் போட்டிகள் டேபிள் டென்னில் விளையாட்டின் அரையிறுதி ஆட்டம் இந்தியா – நைஜீரியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் முதலில் நடைபெற்ற இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜி சத்ரியன் மற்றும் ஹர்மீத் தேசாய் ஆகியோர், நைஜீரியாவின் ஓலிஜித் ஓமோடாயோ மற்றும் அபியோடன் போட் ஆகியோரை வீழ்த்தினர்.
அடுத்த ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹர்மித் தேசாய் சிங்கப்பூர் வீரர் கிளாரன்ஸ் சூவை எதிர்த்து விளையாடினார். இந்திய அணி சிங்கப்பூர் அணியை 3- 1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தக்கவைத்து கொண்டது. நடப்புச் சாம்பியனான இந்திய அணி மீண்டும் தங்கம் வென்று அசத்தியுள்ளது.
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்