கடந்த சில மாதங்களாகவே வட இந்தியர்களால் தமிழக ரயில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தற்போது சேலத்தில் இருந்து சென்னைக்கு மகிழ்ச்சியாக பயணம் மேற்கொள்ளலாம் என்று ரயிலில் ஏறிய பெண்ணுக்கு அந்த பயணத்தை மோசமான அனுபவமாக மாற்றி உள்ளனர் வட இந்தியப் பயணிகள்.
சேலம்-சென்னை ரயில் பயணத்திற்காக முறைப்படி முன்பதிவு செய்து டிக்கெட் எடுத்து வந்த அந்த பெண் சரியான பெட்டியில் தான் பயணித்துள்ளார். ஆனால், சுமார் எட்டு பேர் மட்டுமே அமரக்கூடிய அந்த பெட்டியில் சுமார் 100 பேர் அனுமதி இல்லாமல் பயணம் செய்துள்ளனர்.
முறைப்படி முன்பதிவு செய்தும் சீட் இல்லாமல் நெருக்கடியில் பயணித்த அந்த பெண்ணுக்கு மேலும் அசௌகரியத்தை கொடுத்துள்ளார்கள் அந்த வட இந்திய பயணிகள். ஒரு கட்டத்தில் ரயிலை நிறுத்தி வேறு பெட்டிக்கு போகலாம் என்று அந்த பெண் முயற்சி செய்கின்ற போது அதற்காக எமர்ஜென்சி செயினை கூட இழக்க விடவில்லை அந்த வட இந்திய கும்பல்.
இறுதியாக தன்னுடைய துப்பட்டாவால் தூக்கு மாட்டிக் கொள்வேன் என அந்த பெண் சொன்னதற்கு பிறகு ஒருவர் அந்த பெண்ணிற்கு உட்கார இடம் கொடுத்துள்ளார். அதுவும் அசௌகர்யமாகவே தான் இருந்துள்ளது. இப்படி அவதிப்பட்ட அந்த பெண்ணுக்கு இறுதியாக அங்கு யாசகம் கேட்டு வந்த திருநங்கைகள் தான் உதவி செய்துள்ளனர்.
இதில், மற்றொரு கொடுமை என்னவென்றால் நடந்த இந்த சம்பவங்கள் பற்றி அடுத்த பெட்டியில் ஏறிய பிறகு டிடிஆர் இடம் அந்த பெண் புகார் கொடுத்தபோதும் அதனை கவனிக்காமல் இதோ வரேன் என்று சொல்லிவிட்டு போனவர் திரும்பவும் வரவே இல்லை.
அர்களுக்கு முறையான வழிகாட்டுதல்களும் கொடுக்கவில்லை. இப்படி அந்த பெண்ணின் பயணம் மோசம் அடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்த மோசமான அனுபவம் பற்றி ஒரு தொலைக்காட்சிக்கு அந்த பெண் தகவல் கொடுத்துள்ளார்.
இந்திய ரயில்வே இதுபோல முறையான அனுமதி இல்லாமல் வரும் வட இந்திய மக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு ஏன் இத்தனை மெத்தனத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்று விமர்சனங்களும் கேள்விகளும் மீண்டும் ஒருமுறை சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இது போன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசின் இந்த ரயில்வே?