சென்னை அப்போலோ மருத்துவமனையில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ப .சிதம்பரம். இவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர்.மேலும் மத்திய நிதித்துறை அமைச்சராகவும் மத்திய உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். தற்போது, மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
இவரது மகன்,கார்த்தி சிதம்பரம், கடந்த 2019ஆம் ஆண்டு சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்த நிலையில்,சென்னை அப்போலோ மருத்துவமனையில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் கார்த்தி சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டபட்டுள்ளது. அதில்..
கார்த்தி சிதம்பரத்துக்கு இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “திட்டமிட்டபடி எந்த பிரச்னையும் இன்றி அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மருத்துவர் கே. எஸ். சந்தோஷ் ஆனந்த், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வைத்தார். தற்போது, அவர் குணமடைந்து வருகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.