நாடு முழுவதும் தக்காளி விலை(Tomato Price) உயர்ந்துள்ள நிலையில் மோடியை(modi) கிண்டல் செய்து ட்விட்டரில் காங்கிரஸ் கட்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழையால் விளைநிலங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தக்காளி செடிகள் தண்ணீரில் மூழ்கி காய்கள் அழுகின. இதனால் சந்தைகளுக்கு தக்காளியின் வரத்து குறைந்ததை அடுத்து அதன் விலை உச்சத்திற்கு சென்றது.
இதனை தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்தது.இந்த நிலையில்,கடந்த 12 நாட்களில் தக்காளியின் விலை(Tomato Price) கிலோவுக்கு 70 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இதனால் மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ இஞ்சி 320 ரூபாய்க்கும், சின்னவெங்காயம் 150 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் நாடு முழுவதும் தக்காளி விலை(Tomato Price) உயர்ந்துள்ளதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் நிர்மலா சீதாராமனை டேக் செய்து மோடி தக்காளி பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.