கோவையில் அதிமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் (Consultation Meeting) பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது..,
ஓ.பி.எஸ் தேர்தல் முடிந்தவுடன் பாஜகவில் சேர்ந்திருவார். பா.ஜ.கவிற்கு கூலிக்கு மாரடடிப்பவராக ஒ.பி.எஸ் உள்ளார். அதிமுக தலைமையில் மகத்தான கூட்டணி அமையும். பாஜக இல்லாத கூட்டணியாக அமையும்.
சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில் எடப்பாடி ஆட்சி இருந்தது. பா.ஜ.க ஆதரவு நடந்து இருப்பதாக ஓபிஎஸ் சொல்வது மரை கழன்ட விடயம் (Consultation Meeting).
தேமுதிக 14 தொகுதிகள் கேட்பது அவர்களுடைய விருப்பம். மற்ற கட்சிதான் அதை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை முடிவு செய்யும்.
எதுவாக இருந்தாலும் பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார். இதில் நான் எதுவும் சொல்ல முடியாது.
இதையும் படிங்க : Polyester : இலவச வேட்டியில், 78% பாலியஸ்டர் நூல்.. அண்ணாமலை விளாசல்!
எம்ஜிஆர் , ஜெயலலிதா பல நேரங்களில் தனித்து போட்டியிட்டு ஜெயித்து உள்ளனர். அவர்கள் வழியில் கழகம் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறும். கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு தான் வெற்றி பெற வேண்டும் என இல்லை.
தனித்தன்மையோடு பல கட்டங்களில் நாங்கள் வென்று இருக்கின்றோம். கட்சிகள் இணைந்தால் அது அவர்களுக்கு அங்கீகாரமாக இருக்கும்.
பிற கட்சிகள் கூட்டணிக்கு வரட்டும் என காத்திருக்க வேண்டிய சூழல் எங்களுக்கு இல்லை.
நாங்கள் யாரையும் போய் கெஞ்ச வேண்டிய அவசியம் கிடையாது. யார் வீட்டு கதவையும் தட்ட வேண்டியதும் கிடையாது. கட்சிகள் எங்களை நோக்கி வரும்.
அதிமுகவின் இலக்கை பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
கிளாம்பாக்கத்தில் உரிய பேருந்துகள் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த அரசு துக்ளக் அரசாங்கமாக இருக்கிறது. உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நிர்வாக திறனற்ற அரசாக உள்ளது.
முள்ளிவாய்க்கால் படுகொலையின் பொழுது ஆதரவை வாபஸ் வாங்கிடுவோம் எனக்கூறி ஏன் போரை நிறுத்தவில்லை. கச்சத்தீவை தாரை வார்க்கும் பொழுது திராவிட முன்னேற்ற கழகம் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த போது இலங்கை அரசு அழுத்தங்களுக்கு பயந்தது.
இப்போது திமுக ஆட்சியில் பயம் இல்லாமல் இலங்கை அரசு செயல்படுவதால் தான் தொடர்ந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
தேர்தல் வருவதால் மட்டும் பசப்பு வார்த்தைகளை பேசி, நீலீக் கண்ணீரை திமுக வடிக்கிறது. மக்களை பாதிக்கின்ற எந்த சட்டத்தையும் அதிமுக ஏற்காது.
சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதலில் குரல் கொடுக்கும் இயக்கம் அதிமுக தான்.
பிரதமர் பாஜகவின் தலைவர்களில் ஒருவர், இது தேர்தல் காலம் என்பதால் இந்த நேரத்தில் அவரை எப்படி சந்திக்க முடியும் என்றவர்,
பல்லு படாமல் என பேசும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நிச்சயம் லேகியம் விற்பவராக தான் இருப்பார் என்று சாடினார்.