இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரானோ தொற்று உறுதியானது.
அதனை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில் ,இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனை அடுத்து அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி,தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார் .மேலும் தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளக் கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வலியுறுத்தியுள்ளார்.