எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,461 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 543 பேரும், செங்கல்பட்டில் 240 பேரும், கோவையில் 181 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் இருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது இபிஎஸ்-ன் மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு லேசான தொற்று இருப்பதால் அவர் தன்னை சேலத்தில் உள்ள வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.இந்நிலையில், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது