சென்னை அருகே குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் 30 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பும் கணிசமாக அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளையும் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை அருகே குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் 30 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுமார் 250 ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 30 பேருக்கு கொரோனா உறுதியானதால் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட்டுள்ளது.