- கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்துக்கு பிறகு, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம்.இந்தியாவின் இரண்டாவது பழமையான மைதானமாக திகழ்கிறது.
- 1916 ம் ஆண்டு கட்டப்பட்டு, தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும், சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் புத்துயிர் பெற்றுள்ளது.
- 1934 ம் ஆண்டு இங்கு முதல் சர்வதேச போட்டியாக, இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
- அதை தொடர்ந்து சர்வதேச போட்டிகள், உள்ளூர் போட்டிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டிகள் இந்த சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துள்ளது.
- அண்ணா பெவிலியனில் சுமார் ₹139 கோடி செலவில் புதிய கேலரியை ஒரே வருடத்தில் கட்டி முடித்துள்ளனர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப். பழமையான கேலரிகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
- சி.எஸ்.கே. அணியின் ஹோம் கிரவுண்டாக ‘AnbuDen’ சேப்பாக்கம் விளங்குகிறது.
- ஏற்கனவே 31,140 கேலரிகள் இருந்த நிலையில், புதிதாக கட்டப்பட்ட கேலரியில் 5,306 இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சேப்பாக்கத்தில் 36,446 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.
- பல்வேறு காரணங்களால், ஏற்கனவே பயன்பாட்டில் இல்லாமல் இருந்த I, J, K கேலரிகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
- சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கேலரிக்கு கலைஞர் மு.கருணாநிதி ஸ்டாண்ட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- எம்.எஸ். தோனி, அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய கேலரியை திறந்து வைத்துள்ளார்.
- புதுப்பிக்கப்பட்ட சேப்பாக்கம் மைதானத்தில், வரும் 22ம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.
- 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த சேப்பாக்கம் மைதானத்தில், ஒரு கேலரிக்கு பெயர் சூட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- அது மட்டுமில்லாமல், 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், ஐபிஎல் போட்டிகள் இங்கு நடைபெறவுள்ளது. சேப்பாக்கத்தில் கிரிக்கெட்டை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.