நடப்பு ஐ.பி.எல் தொடரில் கெத்தாக களமிறங்க போகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு (CSK Sponsor) புதிய அதிகாரப்பூர்வ ஸ்பான்சர் ஒப்பந்தமாகி உள்ளதை அடுத்து அதன் ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
துபாயில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஏலம் கடந்த சில மாதங்களுக்கு முன் விறுவிறுப்பாக நடைபெற்றது .
இந்த ஏலத்தில் தங்கள் அணிக்கு தேவையான பல இளம் வீரர்களை 10 அணிகளும் போட்டி போட்டுகொண்டு ஏலத்தில் எடுத்தது.
ஐ.பி.எல் தொடரில் 4 முறை கோப்பையை கைப்பற்றிய சிஎஸ்கே அணி இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் தோனியின் தலைமையின் கீழ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது .
இந்த ஆண்டு சி.எஸ்.கே அணி எத்தனை போட்டிகளில் வெல்ல போகிறது மற்ற அணிகளுக்கு சரியான பதிலடி கொடுத்து பிளே ஆஃப் சென்று அசத்துமா என்ற கேள்விகள் பல மனதில் இருக்க .
மறுபக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் ஐ.பி.எல் பயணம் இந்த ஆண்டோடு முடிய போகிறதா என்ற கேள்வி மனதை போட்டு உலுக்கி வருகிறது .
இது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் கூகுளில் சென்று இது தோனியின் கடைசி தொடரா ? என தேடத் தொடங்கியுள்ளனர்.
கடந்த ஐ.பி.எல் தொடரில் எனக்கு விளையாட ஆசை தான் ஆனால் என் உடம்பு அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என உள்ளதை உள்ளபடி தோனி சொல்லிருந்தார்.
இப்படி இருக்கும் நிலையில் தோனி ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். அதன் வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தோனியின் தலைமையில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே இம்முறையும் கோப்பையை வென்றால் ஐபிஎல் வரலாற்றில் 6ஆவது முறையாக கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை சிஎஸ்கே பெறும்.
அதுமட்டுமின்றி, கேப்டன் தோனியின் கடைசி சீசனாக இந்த தொடர் இருக்கும் என கூறப்படுகிறது.
ரசிகர்கள் அனைவரும் செம ஆவலாக காத்திருக்கும் வேளையில் இன்னும் போட்டி அட்டவணை அறிவிக்கப்படவில்லை என்பதால் முதல் போட்டியில் சென்னை அணி, யாருடன் எங்கு விளையாடும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தும் நிகழ்வும் சென்னையில் நிகழ்ச்சி ஒன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது .
இந்த நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஸ்பான்சர் (CSK Sponsor) உடன் வருவதால், அந்த அணியின் புதிய ஜெர்ஸி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அருகே உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிஎஸ்கே வீரர்களான தீபக் சஹார், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வளைகுடா நாடுகளைச் சேர்ந்த Etihad Airways என்ற விமான சேவை நிறுவனம் சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக உருவெடுத்துள்ளது.