உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் விராட் கோலியின் அபார சதத்துடன் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது.
புனேயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
ஆரம்பம் முதல் நிதானமாக ஆடிய வங்கதேச அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் அடுத்தடுத்து அரைசதம் கடந்து அசத்தினர் .அவர்களை தொடர்ந்து வந்த மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க சிறப்பாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் கேட்ச் ஆனார்.
இதையடுத்து முஷ்பிகுர் ரஹீம் 38 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க . இன்னிங்சின் இறுதி ஓவர்களில் மஹ்முதுல்லாஹ் அதிரடியாக விளையாடி 46 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் 50 ஓவர்களில் வங்கதேசம் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது.
வழக்கம் போல் ரோகித் மற்றும் ஷுப்மன் கில் இணை ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை தொடங்கினர். அபாரமாக ஆடி அரைசதம் போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்களில் அவுட் ஆனார்.
இதையடுத்து ஷுப்மன் கில்லுடன் , விராட் கோலி ஜோடி சேர்ந்தார் அணியின் வெற்றிக்காக இருவரும் பொறுப்புடன் விளையாடினர். சிறப்பாக ஆடிய ஷுப்மன் கில் 55 ரன்களில் வெளியேறிய , விராட் கோலி தனது அதிரடியால் எதிரணியை துவம்சம் செய்தார் .
இறுதிக்கட்டத்தில் அணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட, கோலி சதம் அடிக்க 3 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 42வது ஓவரில் சிக்ஸ் அடித்த கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 48வது சதத்தை பதிவு செய்தார். அதேவேளையில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
நடப்பு உலக கோப்பை தொடரில் புள்ளிப் பட்டியல் 8 புள்ளிகளுடன் 2வது இடத்திலேயே இந்திய அணி நீடிக்கிறது . இந்த பக்கம் அதே 8 புள்ளிகளுடன் இருக்கும் நியூசிலாந்து அணி, நெட் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது
நடப்பு உலககோப்பை தொடரில், இந்த 2 அணிகள் மட்டுமே எந்த போட்டியிலும் தோற்காமல் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.