உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்துள்ளது.
13-ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 05ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இம்முறை இந்தியாவில் நடைபெறும் இத்தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது .
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் இன்று நடைபெறும் 17 வது லீக் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.
புனேயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
ஆரம்பம் முதல் நிதானமாக ஆடிய வங்கதேச அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான தன்சித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் அடுத்தடுத்து அரைசதம் கடந்து அசத்தினர் .அவர்களை தொடர்ந்து வந்த மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க சிறப்பாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் கேட்ச் ஆனார்.
இதையடுத்து முஷ்பிகுர் ரஹீம் 38 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க . இன்னிங்சின் இறுதி ஓவர்களில் மஹ்முதுல்லாஹ் அதிரடியாக விளையாடி 46 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் 50 ஓவர்களில் வங்கதேசம் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது .
இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.