உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுக்கிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் டேவிட் வார்னருக்கென்று தனி சிறப்பு இடமுண்டு. குறிப்பாக இந்தியாவில் அவருக்கென்று பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர், சமூக வலைதலாமான இன்ஸ்டாகிராம் மூலம் அவரை பல லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அவர் சமீப காலமாக பல பிரபல தெலுங்கு பட பாடல்கள் மற்றும் காட்சிகளை நடித்து, நடனமாடிய காணொளியை அதில் பதிவிடுவார்.
கிரிக்கெட் மட்டுமின்றி காணொளி பதிவின் மூலம் கூட பல லட்சம் ரசிகர்களை தன் வசமாக்கினார். இந்தியாவில் நடைப்பெரும் ஐபிஎல் போட்டியில் டெல்லி, ஹைதராபாத் ஆகிய அணிகளில் விளையாடியதன் மூலம் இந்திய ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் வார்னர்.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அவர் பதிவில் கூறியதாவது, “ எனது நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் என்றும், நீங்கள் அனைவரும் மகிழ்வாக இருக்க விரும்புகிறேன் ” என்று கூறியுள்ளார்.