முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் 15 தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில், முத்துபேட்டையில் அமைந்துள்ளது தாவூத் காம் தர்கா. இங்கு ஒலியுல்லாஹ் என்னும் இஸ்லாமிய சூபி அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை முன்னிட்டு கந்தூரி விழா நடத்தப்பட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
மதவேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் இந்த விழாவிற்கு வருகை தருவார்கள். இதனால் அப்பகுதி மக்களுக்கு மதசார் பின்மைக்கு ஒரு அருமையான எடுத்துகாட்டாக இந்த விழா திகழ்கிறது.
அந்த வகையில் நடப்பாண்டில் டிசம்பர் 15 தேதி கந்தூரி விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மேலும், அந்த விடுமுறை நாளை சரிசெய்யும் பொருட்டாக அடுத்த மாதம் 8-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.