கோவை சரக டிஐஜி விஜயகுமார் 6 மாத விடுமுறை கேட்டும் கொடுக்கவில்லை என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman)குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேற்று காலை 6 மணியளவில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காவல்துறையினர் பலர் வீட்டிலும் , காவல்நிலையத்திலும் தற்கொலை செய்துகொள்ளும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி வருகிறது .
இந்த நிலையில்,புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் விஜயகுமாரின் தற்கொலைகக்கு காரணம் அவர்களுக்கு கொடுக்கப்படும் பணிச்சுமையா அல்லது வேறு ஏதும் தனிப்பட்ட காரணமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர்,
விஜயகுமாரின் தற்கொலைக்கு பணிச்சுமையும், சில அழுத்தங்களும் காரணமாக இருக்கலாம் என்றும், இதுபோன்ற துயர முடிவுகளைத் தவிர்க்க, காவல்துறையினருக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறிவிட்டு, விதிமுறைகளை அறிவிப்பது, தவறான நடைமுறை என சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.