திமுக ஒரு மதத்திற்கு எதிரான கட்சி என பொய் பிரச்சாரத்தை இனிமேலும் செய்ய வேண்டாம் திண்டுக்கல் ஐ லியோனி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி கடலூரில் நடைபெற்ற கலைஞர் பண்பாட்டு பாசறை விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்
அப்போது பேசிய அவர்,”தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் அண்மையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.
அதில் வெளிநாடுகள் வெளிமாநிலங்களில் உள்ள நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பதும் தமிழ் உள்ள நூல்கள்
உலகத்தில் உள்ள பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்க 300 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
இதன் மூலம் தமிழ் மொழியில் உள்ள செய்திகள் அனைத்தும் உலகம் முழுவதும் சென்றடையும் வழியை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்று அனைத்து மதத்தினரையும் ஏற்றுக்கொள்ளும் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. இந்து கடவுள்களை நான் இழிவுபடுத்துவதாக என்னை பற்றி தவறான கருத்துக்களை சிலர் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க : Fishersman Issue-”மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் DMK Protest..”-எங்கே,எப்போது?
நான் எல்லா மதத்தையும் ஏற்றுக் கொள்கிறவன் தமிழ்நாடு முழுவதும் 1500 கோவில் கும்பாபிஷேகங்களில் பட்டிமன்றம் நடத்தியுள்ளேன்.
அந்த கோவில்களில் எனக்கு பரிவட்டம் கட்டி அந்த கோவில் மரியாதையை நான் பெற்றுள்ளேன் எனவே எல்லா மதத்திற்கும் பொதுவான ஆள்தான் நான் என தெரிவித்தார்.
மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பேசும் போது ஒரு சிலர் எனது கருத்தை தவறாக பரப்புகின்றனர்.
இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பும் ஊடக கொலைகாரர்கள் பெரிய அளவில் பரவி உள்ளனர்.
சின்ன விஷயத்தை பெரிசாக்கி தங்களின் விளம்பரத்திற்காக அது போன்று செய்கின்றனர்.
அதைப் பார்த்து பயப்படும் இயக்கம் திமுக அல்ல. இதுபோன்ற விமர்சனங்கள் பொது வாழ்வில் நிச்சயம் வரும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார்.
இதையும் படிங்க : https://x.com/ITamilTVNews/status/1756247810767478804?s=20
மேலும் கடவுள் மறுப்பு கொள்கை என்பது வேறு பகுத்தறிவு கொள்கை என்பது வேறு பெரியார் கடவுளை மற மனிதனை நினை என்று சொன்னார்.
அவர் கூறியது கடவுளை புறக்கணிப்பது என்று அர்த்தம் அல்ல மனிதனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதுதான் எந்த மதமாக இருந்தாலும்,
ஒரு ஆட்சியாளர் கலைஞர் சொல்வது போல் நான் ஒரு இயக்கத்திற்கு தலைவன் மட்டுமல்ல எல்லா மக்களின் முதலமைச்சர் எல்லா மக்களின் வழிபாட்டையும் எல்லா மக்களின் உணர்வுகளையும் நான் மதிக்க வேண்டும்
என்று கூறி 200 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா திமுக ஆட்சியில் நடைபெற்றது.
கட்சியினுடைய கொள்கை என்பது வேறு ஆட்சி என்பது வேறு அது இரண்டையும் போட்டு குழப்பக் கூடாது.
இதுகுறித்து கலைஞர் தனது வசனத்திலேயே கூறியுள்ளார் கோவில் கூடாது என்று சொல்லவில்லை கோவில் என்பது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என பராசக்தியிலேயே கூறிவிட்டார்.
எனவே திமுக ஒரு மதத்திற்கு எதிரான கட்சி என போலி பிரச்சாரத்தை பொய் பிரச்சாரத்தை இனிமேலும் செய்ய வேண்டாம் என கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.