அதிமுகவில் சூடுபிடித்துள்ள உட்கட்சி விவகாரத்தின் அடுத்தகட்டமாக சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் ஜூலை 1 ஆம் தேதி இன்று பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது .
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில், சென்னை, எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் 01-07-2023 இன்று சனிக்கிழமை காலை 10.31 மணிக்கு தொடங்குகிறது.
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் களத்தில் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சேர்ந்து செயல்படுவோம் என்று அறிவித்த நிலையில் அடுத்த கட்ட நகர்வு குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.