இரட்டை வேடத்திற்கு உறைவிடமாக தி.மு.க.வினர் இன்று விழித்துக்கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசே நடத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளதற்கு அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதல்வர் அனுப்பிய கடிதம்:
இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி, வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்குக் கொண்டு செல்வதற்கும், வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கும் ஏதுவாக, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், விரிவானதொரு சாதிவாரிக் கணக்கெடுப்பை இணைத்து நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு உடனடியாகத் தொடங்கிட வேண்டும்.
2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில், வரவிருக்கக்கூடிய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும். மாநில அளவில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இந்தியாவின் சட்டப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு,
முக்கியமான சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை நிலைநாட்டிட இயலும். அதேபோல், சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட இயலும்” என முதல்வர் ஸ்டாலின் அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இரட்டை வேடத்திற்கு உறைவிடமாக தி.மு.க.வினர் இன்று விழித்துக்கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசே நடத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து அவர் தனது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
இரட்டை வேடத்திற்கு உறைவிடமாக தி.மு.க.வினர் இன்று விழித்துக்கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசே நடத்த வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளது.
முன்னதாக 2021 மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காக முந்தைய அரசால் அமைக்கப்பட்ட குலசேகரன் கமிஷனுக்கு 6 மாதங்கள் நீட்டிக்க மறுத்தது.
மேலும் கமிஷன் பாதியில் நிற்கும் நிலையில் திமுகவை 6 மாத கால நீட்டிப்பு வழங்காமல் தடுத்தது எது? என்று கேள்வி எழுப்பினார்.
UPA அரசாங்கத்தில் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான திமுக, அதன் ஆட்சிக்காலம் முடியும் வரை, 2011-ன் சமூக-பொருளாதார ஜாதிக் கணக்கெடுப்பை வெளியிட எதுவும் செய்யவில்லை.
மத்திய அரசிடம் அற்பமான கோரிக்கைகளை வைக்கும் முன், தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை திமுகவுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.