பொதுவாக நம் அனைவருக்குமே சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்றால் வீட்டில் இருக்கும் பெண்கள் காமாட்சி அம்மன் விளக்கு பூஜையை தினமும் செய்து வர வேண்டும்.
இந்த பூஜையை எப்படி செய்வது? ஒரு பித்தளை தாம்பூல தட்டை எடுத்துக் கொண்டு அதில் பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும். அதன் மேல் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். அந்த ஒரு ரூபாய் நாணயத்திற்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைக்க வேண்டும்.
அதன் மேல் காமாட்சி அம்மன் விளக்கை வைத்து விட்டு, அதில் எண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த விளக்கிற்கு முன்பு அமர்ந்து சிறிது நேரம் சொந்த வீடு வேண்டும் என்ற ஆசையை நினைத்துக்கொண்டு உங்கள் குலதெய்வத்தையும், முருகப்பெருமானையும் நினைத்து மனமுருகி வேண்ட வேண்டும்.
இப்படி தினமும் விளக்கேற்றி பூஜை செய்து வர வேண்டும். தாம்பூல தட்டில் இருக்கும் பச்சரிசி நிறம் மாறாமல் இருக்கும் பட்சத்தில் அதை அப்படியே வைக்கலாம். பச்சரிசி நிறம் மாறியவுடன் மாதத்திற்கு ஒருமுறை அந்த பச்சரிசியை எடுத்து காக்கை குருவிகளுக்கு இரையாக போடலாம் அல்லது அதனுடன் வெள்ளம் சேர்த்து கோவிலுக்கு செல்லும்போது மரத்தடியில் இருக்கும் எரும்பு புற்றில் போட்டால் இன்னும் புண்ணியம் சேரும்.
ஆனால், தாம்பூல தட்டில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை நீங்கள் சொந்த வீடு கட்டும் வரை மாற்றவே கூடாது. இந்த பூஜையை தினமும் தவறாமல் செய்து வந்தால் உங்களுடைய சொந்த வீடு கட்டும் ஆசை நிச்சயம் நிறைவேறும். ஆனால், விளக்கு ஏற்ற தொடங்கிய ஒரு சில நாட்களில் வீடு கட்டக்கூடிய வாய்ப்பு அமைந்து விட்டால், அதன் பிறகு இந்த வழிபாட்டை நிறுத்தி விடக் கூடவே கூடாது.
புது வீடு கட்டத் தொடங்கி, அந்த வீட்டிற்கு வாசல் கதவை வைக்கும் போது, நிலைவாசல் கதவுக்கு அடியில் சில மங்களகரமான பொருட்களை எல்லாம் பொழுது அதில் அந்த ஒரு ரூபாய் நாணயத்தையும் வேண்டும்.
இந்த பரிகாரத்தை முழு மனதுடன் வேண்டிக் கொண்டு பூஜை செய்வதன் மூலம் சொந்த வீடு கட்டும் ஆசை நிச்சயம் நிறைவேறும்.