இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானின் குழந்தை ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான்’ படத்தின் ’ஜூமே ஜோ பதான்’ பாடலுக்கு குஷியாக நடனம் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் கடந்த ஜனவரி 25-ம் தேதி வெளியானது.மேலும் இந்த படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் RAW பீல்ட் ஏஜெண்டான பதான் ஷாருக்கான் ஆக நடித்துள்ளார். பதான் படத்தின் இசையை விஷால்-சேகர் இசையமைக்க, சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா ஆகியோர் பின்னணி இசையமைத்துள்ளனர்.
ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் மார்ச் 22 தேதி ஓடிடியில் அதிகாரபூர்வமாக வெளியானது.
முன்னதாக ஷாருக்கான் நடித்த பதான் படத்தின் ’ஜூமே ஜோ பதான்’ என்ற பாடலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானின் குழந்தை நடனம் ஆடியத்தை தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டு ஷாருக்கானை டேக் செய்து, ”கான் சார் உங்கள் ரசிகர்கள் பட்டியலில் இன்னுமொரு க்யூட்டான ரசிகரை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில்,இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் டிவிட்டுக்கு பதில் டிவிட்டாக சோட்டா பதான்’ என்று பட்டம் கொடுத்து மகிழ்ச்சியை நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.